உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிகர் உற்சவம் நாளை துவக்கம்

தேசிகர் உற்சவம் நாளை துவக்கம்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம் நாளை (2ம் தேதி ) துவங்குகிறது. காலை 9:00 மணிக்கு மங்களாசாசனம் மற்றும் சேவை சாற்றும் முறை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, இரவில் பெருமாள் மற்றும் தேசிகர் புறப்பாடு நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை, காலையில் சேவை மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சி, பெருமாள் மற்றும் தேசிகர் புறப்பாடு நடக்கிறது. 12ம் தேதி, ஊஞ்சல் உற்சவம், 13ம் தேதி, பானக பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !