உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடும் எதிர்ப்பினையும் மீறி தமிழாசிரியர்கள் இடமாற்றம் 

கடும் எதிர்ப்பினையும் மீறி தமிழாசிரியர்கள் இடமாற்றம் 

புதுச்சேரி: தமிழாசிரியர்கள் கடும் எதிர்ப்பினை மீறி அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக., 29, 30 தேதிகளில் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதற்காக 245 தமிழ் ஆசிரியர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது.29ம் தேதி கிராமப்புற ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். 30ம் தேதி நகர்புற தமிழ் பட்ட தாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்த போது குறைபாடுகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 18ம் தேதி பந்த் போராட்டத்தின் போது இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. அதனையும் தமிழாசிரியர்கள் புறக்கணித்தனர். தமிழாசிரியர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி 234 ஆசிரியர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். போராட்டம் நடத்திய 97 தமிழாசிரியர்களும் துாக்கியடிக்கப்பட்டனர். வரும் 14ம் தேதி வரை கால அவகாசம் இருந்தபோதும் கூட, அவசர அவசரமாக நேற்றே விடுவிக்கப்பட்டனர்.தமிழாசிரியர்கள் கூறுகையில், 'கல்வி துறையில் ஆசிரியர்களாக உள்ளே நுழைந்தபோது அதிக மதிப்பெண் எடுத்த தமிழாசிரியர்கள் புதுச்சேரியை தேர்வு செய்தனர். குறைந்த மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் காரைக்காலை தேர்வு செய்தனர். காரைக்கால் பிராந்தியத்தை தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்து தற்போது இடமாறுதல் செய்கின்றனர்.பணியில் சேரும்போதே காரைக்கால் பிராந்தியத்திற்கு சென்றால் கூடுதல் மதிப்பெண் என, அறிவித்து இருந்தால் காரைக்கால் பிராந்தியத்தை தேர்வு செய்து இருப்பர்.தற்போது திடீரெனமதிப்பெண் போடுவது ஏன். இது போன்று பல குளபடி இருப்பதால் கவுன்சிலிங்கை ஏற்காமல் நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே இடமாறுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர் தலையிட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ