மேலும் செய்திகள்
ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
01-Jul-2025
பாகூர் ; நரம்பை கிராமத்தில், 20 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில், மேம்பாட்டு பணியை, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக ஏம்பலம் தொகுதி குடியிருப்புபாளையம் ஜெயம் நகரில், 6 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, நரம்பை கிராமத்தில் புதிய குடியிருப்பு பகுதியில் 20 லட்சத்து 94 ரூபாய் செலவில் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் சுப்ரமணியன், ஒப்பந்ததாரர் மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Jul-2025