உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரூ.6.16 கோடியில் வளர்ச்சி பணிகள்: எதிர்கட்சி தலைவர் துவக்கிவைப்பு

 ரூ.6.16 கோடியில் வளர்ச்சி பணிகள்: எதிர்கட்சி தலைவர் துவக்கிவைப்பு

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் ரூ. 6.15 கோடியில் வளர்ச்சிப் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார். புதுச்சேரி நடேசன் நகர் ரயில்வே மேம்பாலம் முதல் வில்லியனுார் தொகுதிக்குட்பட்ட அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் வரை இணைப்புச் சாலையின் இருபுறமும் 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிக்கு 5 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வடக்குப்பக்க சேவைச்சாலையை நடேசன் நகர் புறவழிச்சாலையுடன் இணைக்கும் பணிக்கு 35 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் என 6 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளை பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணி துவக்கம் அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தின் கீழ் நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நெடுஞ்சாலைக் கோட்ட செயற்பொறியாளர் பன்னீர், உதவிப் பொறியாளர் சிவப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி