உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரவிந்தர் சித்தி தினம் பக்தர்கள் தரிசனம்

 அரவிந்தர் சித்தி தினம் பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி: அரவிந்தரின் 99ம் ஆண்டு சித்தி தினத்தையெட்டி, அவர் தங்கியிருந்த ஆசிரமத்தை பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். புதுச்சேரியில் தங்கியிருந்த அரவிந்தர் 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி சித்தி பெற்று, ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார். அதனையொட்டி அந்த நாள் ஆசிரம நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஆண்டுதோறும் நவ., 24ம் தேதி சித்தி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 99வது சித்தி தினமான நேற்று அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6:00 மணி முதல் கூட்டு தியானம் நடந்தது. ஆசிரமத்தில் உள்ள அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்திய பக்தர்கள், அவர் தங்கியிருந்த அறையை நீண்ட வரிசை யில் காத்திருந்த தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ