உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

 ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

புதுச்சேரி: தவளக்குப்பம் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தவளக்குப்பம் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. 8ம் வகுப்பு மாணவர்கள் நித்தாகரன், ராம்அரவிந்தன் முதலிடத்தையும், 6ம் வகுப்பு மாணவர்ஸ்ரீஹரி, மாணவி கற்பகாம்பாள் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை, பள்ளி முதல்வர் கார்த்திகா பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் நாகநாதன், கல்பனா ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ