உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் பட்டம்: பாட புத்தகத்தை தாண்டிய புது வெளிச்சம் மாணவர்கள் நெகிழ்ச்சி   

தினமலர் பட்டம்: பாட புத்தகத்தை தாண்டிய புது வெளிச்சம் மாணவர்கள் நெகிழ்ச்சி   

முதல் பரிசால் மகிழ்ச்சி எங்க பள்ளியிலேயே, முதன்முதலாக, இந்த போட்டியை துவங்கியது, மிகவும் சந்தோஷம். அதுமட்டுமின்றி, இந்த முதல் போட்டியிலேயே நாங்களே, முதல் பரிசை வென்றதில், மகிழ்ச்சி. இத்துடன் மட்டுமின்றி, அடுத்து ஜனவரியில் நடக்கும், இறுதி போட்டியிலும் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தி, கண்டிப்பாக சாதித்து காட்டுவோம். –அரவிந்த்குமார், 9 ம் வகுப்பு. அதிகரித்து கொண்டே செல்லும் ஆர்வம் போட்டி துவங்கிய போது, கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனா கடைசியில் நாங்களே முதலிடம் பிடித்ததும், அந்த பயமெல்லாம் நீங்கி மகிழ்ச்சி மலர்ந்தது. ‘தினமலர்–பட்டம்’ இதழை தொடர்ந்து படித்தாலே போதும். நாம் ஏராளமான விஷயங்களை புதிதாக கற்றுக்கொள்ளலாம். நமக்கு தெரியாத விஷயங்களைக்கூட ரொம்ப ஆழமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பா பட்டத்துல வர்ற ஏ.ஐ. பற்றிய சுவாரசியமான தகவல், எனக்கு மிகவும் பிடிக்கும். படிக்க படிக்க நமக்கு ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்லும். –அச்சுதவேல், 9-ம் வகுப்பு தவறாமல் படிக்க வேண்டிய இதழ் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில், இரண்டாவது இடம் கிடைத்ததில், சந்தோஷம். அதுவும் நேராக மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியிருப்பது, இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் அடிப்படையில், செஸ் வீராங்கனை என்பதால், பட்டம் இதழில் வரும், அந்த விளையாட்டு தொடர்பான புதிர்களுக்கு தீர்வு காண்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன், காமிக்ஸ் கதைகளும் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, உயிரியியல் தொடர்பாகனே நிறைய தகவல்களை அளிக்கின்றனர். அது எங்களுடைய பள்ளிப் படிப்புக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. அன்றாட செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் யாருமே சுலபமா புரிஞ்சுக்கிற மாதிரி ரொம்ப அழகாக எழுதுகின்றனர். மொத்தத்தில், மாணவர்கள் எல்லாருமே கண்டிப்பாக தவறாமல் படிக்க வேண்டிய ஒரே இதழ் நம்ம தினமலர் பட்டம்தான்.  –சங்கமித்ரா, பிளஸ்1 வகுப்பு தேர்விற்கும் உதவியாக உள்ளது வெறும் பாடப்புத்தக அறிவைத் தாண்டி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள,‘தினமலர்–பட்டம்’ இதழ், சிறந்த வழி. இது தேர்விற்கும், பொது அறிவிற்கும், மிகப்பெரிய பேரூதவியாக உள்ளது. நமக்கு இதுவரைக்கும் தெரியாத கடினமான விஷயங்களைக்கூட ரொம்ப அழகாக, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தருகின்றனர். இதையெல்லாம் நான் படித்து விட்டு, வீட்டில் போய் பேசும் போது, ‘ஆஹா... எவ்வளவு அருமையான தகவல்’ என்று சொல்லி பாராட்டுகின்றனர். அதை கேட்கவே மிகவும் பெருமையாக உள்ளது. –கமலிக்கா , பிளஸ்1 வகுப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ