மேலும் செய்திகள்
'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
10-Oct-2025
புதுச்சேரி: வைசியாள் வீதி, சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான 'தினமலர் - பட்டம்' இதழை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நேற்று வழங்கினார். மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பான பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. வைசியாள் வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பங்கேற்று, இந்த கல்வியாண்டு முழுதும் மாணவிகளுக்கு பட்டம் இதழை சொந்த செலவில் வழங்கினார். தொடர்ந்து, மாணவிகள் இடையே பொது அறிவு தொடர்பாக கேள்விகள் கேட்டு, சரியாக பதில் அளித்த 2 மாணவிகளுக்கு தலா ரூ. 500 பரிசு வழங்கினார். பள்ளி துணை முதல்வர் சுகந்தி முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் ராஜம் நன்றி கூறினார்.
10-Oct-2025