உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

புதுச்சேரி, : மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் சார்பில், வினாடி வினா போட்டி நடந்தது.புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவிலான அணிகள் தேர்வு செய்யும் போட்டி, மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது.பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். வினாடி வினா போட்டியில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 620 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். தலா 2 பேர் கொண்ட 8 அணிகள் இறுதி சுற்றில் பங்கேற்றது. 8ம் வகுப்பு ஸ்ரீராம், லுார்து ஜெப்ரி முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு ஜான் பெனிடிக்ட் போஸ்கோ, தர்ஷன் கணபதி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் தேர்வான இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ