உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் பட்டம் வினாடி வினா அரையிறுதி போட்டி பரிசளிப்பு

தினமலர் பட்டம் வினாடி வினா அரையிறுதி போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: வாணரப்பேட்டை, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி லுார்து வளாகத்தில் தினமலர் பட்டம் இதழின் 'வினாடி-வினா' அரையிறுதி போட்டி நேற்று நடந்தது.தினமலர் பட்டம் நாளிதழின் முதல் நிலை தேர்வில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வில் முதல் 8 இடங்களை பிடித்த மாணவர் குழுக்களுக்கு, விஜய் வினாடி - வினாவிற்கான அரையிறுதிப் போட்டியை நடத்தினார்.இதில், பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த மாணவர்கள் ராகவ், ருத்திரீஸ்வரன் முதல் இடத்தையும், பிளஸ் 1 மாணவர்கள் பரத்குமார், புவியரசு இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர் குழுக்களுக்கு பள்ளியின் துணை முதல்வர் செல்வநாதன், ஆசிரியர் சோனியா ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை