உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பன்முக தன்மை கொண்ட தினமலர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாராட்டு

பன்முக தன்மை கொண்ட தினமலர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாராட்டு

புதுச்சேரி: தினமலர் நாளிதழ் 75வது ஆண்டு பவள விழாவில் அடியெடுத்து வைக்கிறது. 75 ஆண்டுகளாக தமிழ் மொழியின் பத்திரிக்கை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கனா மற்றும் டில்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களில் வெளியிடப்படுகிறது. மிக சிறிய அளவில் துவங்கப்பட்ட தினமலர் நாளிதழ் படிப்படியாக உயர்ந்து, தென் மாவட்டங்களில் கோளுன்றியது. பின், வட மாவட்டங்களிலும் தன்னுடைய பாதத்தை பதித்து அனைத்து மக்களும், சாதி, மாத பாகுபாடு இல்லாமல் விரும்பி படிக்கின்ற ஒரு நாளிதழாக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், தினமலர் நாளிதழ் மற்றும் இணைய தளத்தில் வரும் செய்திகள், நிகழ்ச்சிகளை விரும்பி படிக்கின்றனர். அரசியல் மட்டுமின்றி கலை, கலாசாரம், கிராமப்புற செய்திகள், மக்களுக்கு அறிவுறுதல் கூறும் நிகழ்வுகள், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை கொடுப்பது உள்ளிட்ட பல தரப்பட்ட செய்திகளை தொடர்ந்து மக்கள் விரும்பி படிக்கும் வகையிலே உருவாக்கி தருவது மிகவும் பாராட்டுக்குரியது. 75 ஆண்டுகள் தமிழ் பத்திரிகையில் கோளுன்றியுள்ள தினமலர் நாளிதழ் ஆனது தொடர்ந்து, பல பதிப்புகளை பல மாவட்டங்களில் உருவாக்கி ஒரு சக்தி வாய்ந்த பத்திரிகையாக இருந்து வருகிறது. அரசியலை நிர்ணயிக்கும் பத்திரிகையாகவும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விமர்சகர்கள், அரசியல் நடுநிலையாளர்கள் இந்த பத்திரிகையை விரும்பி படிப்பது சிறப்பு அம்சம். இப்படி பன்முக தன்மை கொண்ட இந்த தினமலர் பத்திரிகையானது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும் என ஒட்டு மொத்த செய்திகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. களத்திலே தினமலரின் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பாடுபட்டு அதனுடைய வளர்ச்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்துள்ளனர். தினமலர் நிர்வாகத்தினர் தொடர்ந்து பத்திரிகை தரத்துடன் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இந்நாளில், முதல் முதலாக தினமலரை ஆரம்பித்த பெரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களை வணங்கி, தினமலர் நாளிதழ் நிர்வாகத்தினருக்கும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை கூறி கொள்கிறேன். இன்னும் பல்லாண்டு காலம் தினமலர் நாளிதழ் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி வட மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சிறப்பான முறையில் செய்திகளை மக்களுக்கு அளித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை