உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணிச்சல் மிக்க நாளிதழ் தினமலர் செல்வகணபதி எம்.பி., பாராட்டு

துணிச்சல் மிக்க நாளிதழ் தினமலர் செல்வகணபதி எம்.பி., பாராட்டு

புதுச்சேரி : மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக தினமலர் நாளிதழ் திகழ்கிறது என, செல்வகணபதி எம்.பி., பாராட்டினார். அவரதுஅறிக்கை: 75வது பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமலர் நாளிதழ், மக்களுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறது. அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் முன்னணியில் உள்ளது. அனைத்து துறை சார்ந்த செய்திகளை, மக்களுக்கு கொண்டு செல்வதிலும், அன்றலர்ந்த மலர் போல, தினமலர் நாளிதழ் மணம் பரப்பி வருகிறது. ஆன்மிக செய்திகளை தாங்கி வருவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகம், புதுச்சேரிகலாசாரம், பண்பாடு, தேச ஒற்றுமை என, எந்த பொருளாக இருந்தாலும், அதில் தன்னுடைய நிலைப்பாட்டை தயங்காமல் தெரிவிக்கும் தன்னிகரற்ற, துணிச்சல்மிக்க நாளிதழாக தினமலர் விளங்கி வருகிறது. அதனால் தான், அனைத்து தரப்பு மக்களும் படிக்கக்கூடிய, அதிக விற்பனையாகும் நாளிதழாக, புதுச்சேரி, தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றாக இன்றளவிலும் தினமலர் இருந்து வருகிறது. 'உண்மையின் உரைகல்'லாக தன் நிலைப்பாட்டைத் தயங்காமல் வெளிப்படுத்தும் நாளிதழாகவும் திகழ்கிறது. 75-வது பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமலர் நாளிதழுக்கு பாராட்டுகள். நாளிதழை நடத்தி வரும் நிர்வாகத்தினர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகள்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ