உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ

தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ

புதுச்சேரி: புதுச்சேரி, உப்பளம் துறைமுகம் மைதானத்தில், 'தினமலர்' மற்றும் டார்லிங் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்காட்சி, வரும் 8ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் மங்கையர் மனங்கவரும் அழகு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் விதவிதமான உணவு வகைகள் என, அசத்தலான அரங்குகள் தயாராகி வருகின்றன. புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், வடலுார், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் ஷாப்பிங் செல்ல எவ்வளவு கடைகள், ஸ்டோர் இருந்தாலும், அனைத்து விதமான பொருட்களையும் ஒரே இடத்தில், குடும்பத்துடன் குதுாகலமாக ஷாப்பிங் செய்து விரும்பியதை வாங்கும் அரிய வாய்ப்பு இந்த கண்காட்சி மூலம் ஆண்டிற்கு ஒருமுறை தான் கிடைக்கும். அதிரடி சலுகை விலையில், உங்கள் இல்லத்துக்கு தேவையான பர்னீச்சர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பரிசு பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள் என, நீங்கள் வாங்கும் பொருட்களின் அரங்குகள் வரிசை கட்டி நிற்கின்றன. குடும்பத் தலைவிகளே 'குளுகுளு' ஸ்டால்களில் 'ஷாப்பிங்' செய்து மகிழ நாளை ஒரு நாள் காத்திருங்கள்.

ஒரு ரூபாய் போதும் மொபைல் வாங்க

தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வர்த்தக நிறுவனங்களின் ஸ்டால்கள் அனைத்தும் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன. அதில், மொபைல் போன் விற்பனையில் தனி முத்திரை பதித்து வரும் டார்லிங் நிறுவனம், சாம்சங், விவோ, ஓபோ, ரியல்மி, எம்ஐ (சியோமி) மற்றும் ஆப்பிள் ஆகிய முன்னணி மொபைல் பிராண்ட்களின் புதிய மாடல்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவித்துள்ளன.

36 மாதம் தவணை:

சில மொபைல்களுக்கு 36 மாதம் வரை நீண்ட இ.எம்.ஐ., வசதி உள்ளது. பெரிய தொகையை ஒரே சமயத்தில் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், மாதத்தோறும் கட்ட முடியும். ரூ.1 டவுன் பேமெண்ட்: எந்த மொபைலும் வெறும் ஒரு ரூபாய் செலுத்தி வாங்கலாம் . சாம்சங், ஆப்பிள், விவோ, ஓபோ, ரியல்மி ஆகிய பிரபல மாடல்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். பரிசுகள் காத்திருக்கு: விலை உயர்ந்த (பிரீமியம்) மொபைல் வாங்கினால், ஒயர்லஸ் ஏர்பட்ஸ், பாக்ஸ் பேக், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பல பரிசுகள் கிடைக்கும். குறைந்த விலையில் மொபைல்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தினமலர் கண்காட்சி தான் சிறந்த சாய்ஸ்... மணி பார்ஸ்சை மிச்சப்படுத்தும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை