உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகள் தின விழா

மாற்றுத்திறனாளிகள் தின விழா

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கத்தில்,உலக மாற்றுத்திறனாளிகள் தினம் விழா நடந்தது.புதுச்சேரி சஷம் சார்பில் நடந்த விழாவில், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கேசவேலு முன்னிலை வகித்தார்.ராஜகோபாலன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மணக்குல விநாயகர் கல்வி குழும செயலாளர் நாராயணசாமி, பாலாஜி, வெங்கடாஜலபதி ஆகியோர் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளை கவுரவித்தனர்.நிகழ்ச்சியில், அருணாசலசாமி உட்பட சஷம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தெய்வசிகாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி