உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி கடன் தொகை வழங்கல்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி கடன் தொகை வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி பாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்விக் கடன் தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் (பாட்கோ) மூலம் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு கல்லுாரிகளில் மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் 330 ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ. 4 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, 40 ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடன் தொகை ரூ. 74 லட்சத்து 48 ஆயிரத்து 31 ரூபாயை முதல்வர் ரங்கசாமி, வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார் முன்னிலை வகித்தனர்.இதில், பாட்கோ தலைவர் முத்தம்மா, மேலாண் இயக்குனர் சிவக்குமார், சார்பு செயலர் கந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பொது மேலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை