உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளத்தை சீரமைப்பது குறித்து ஆலோனை

குளத்தை சீரமைப்பது குறித்து ஆலோனை

அரியாங்குப்பம்: கோவில் அருகில் உள்ள குளத்தை மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மணவெளி தொகுதி தவளக்குப்பம் மருத்துவமனை சாலை, முருகன் கோவில் அருகில் குளம் உள்ளது. இக்குளம் மக்கள் பயன்படுத்தாமல், குளத்தில் தண்ணீர் குட்டை போன்று தேங்கி சுகாதாரமில்லாமல் இருந்து வருகிறது. இந்த குளத்தை தனியார் நிறுவன பங்களிப்புடன் சீரமைப்பது குறித்து, முருகன் கோவிலில் இன்று (நவ.,23) ஆலோசனை கூட்டம் நடந்தது. டாக்டர் வித்யாதரன் வரவேற்றார். பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராமு எம்.எல்.ஏ., குளத்தை துார் வாரி, சுற்றுச்சுவர் அமைப்பது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பது, குளம் சீர் செய்யும் செலவில் தானும் பங்கேற்பதாக பேசினார். அதனை தொடர்ந்து, குளத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ