உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 

புதுச்சேரி : மீண்டும் பணி வழங்கக்கோரி சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்ற பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.புதுச்சேரி, பொதுப்பணித் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போதை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் கொள்கை முடிவு செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர். பெரியார் சிலை அருகே துவங்கிய ஊர்வலத்தை அண்ணா சாலை - நேரு வீதி சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை