உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் தகராறு: 3 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 3 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடத்தில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் அடுத்த ஐயங்குட்டிபாளையத்தில், பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், சாணரப்பேட்டையை சேர்ந்த சங்கீத்குமார்,42; என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும், மறைமலை அடிகள் சாலையில், பொதுமக்களிடம் தகராறு செய்த, வேலுாரை சேர்ந்த மணிகண்டன், 22; சரவணன், 23; ஆகிய இருவர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ