மேலும் செய்திகள்
குடற்புழு நீக்க தினம் அதியமான்கோட்டை:
11-Feb-2025
வில்லியனுார்:L வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலை பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.ஆசிரியை சங்கர்தேவி வரவேற்றார்.வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பூங்குழலி பங்கேற்று,குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.சுகாதார ஆய்வாளர் அய்யனார், மதிவதனன்,ஆசிரியர்கள் அருணாதேவி, கனகா, முருகையன், பிரபாகரன், கருணாகரன், உமாதேவி, பிரேமா, கணினி பயிற்றுநர் ரம்யா மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.
11-Feb-2025