உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாவட்ட அளவில் தடகள போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது

 மாவட்ட அளவில் தடகள போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், வரும் 16ம் தேதி, வீராம்பட்டினத்தில் நடக்கிறது. இந்திய தடகள சங்கம், கேலோ இந்தியா, இந்திய விளையாட்டு ஆணையம் இணைந்து, அஸ்மிதா அத்லடிக் லீக் -2025 என்ற தலைப்பில், நாடு முழுதும் 300 மாவட்டங்களில் தடகள போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில், வீராம்பட்டினம் ஜெ.பி. பவுண்டேஷன் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில்,வரும் 16ம் தேதிகாலை 8:00 மணிக்கு இப்போட்டி துவங்க உள்ளது. 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடக்கிறது. 14 வயதிற்குட்பட்டோருக்கான முதல் பிரிவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 60 மீட்டர் ஓட்டப் பந்தயம், இரண்டாவது பிரிவில் நீளம் தாண்டுதல், 60 மீட்டர் ஓட்டப் பந்தம், ஷாட்புட், மூன்றாவது பிரிவில் 600 மீட்டர் ஓட்டப்பந்தம், நீளம் தாண்டுதல் (5 மீட்டர்), 60 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 16 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு, 60 மீட்டர் ஓட்டம், 600 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடக்கிறது. இதில், தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர்கள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் - 9952124654, 7904406916, 9597044035 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்திட வேண்டும். ஏற்பாடுகளை, புதுச்சேரி தடகள சங்கத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தடகள சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை