உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 22 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

22 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் 22 ஆயிரம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரத்துக்கு மிகாமல் கிடைக்க மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு குரூப் சி மற்றும் நான் - கெசட்டட் குரூப் பி ஊழியர்கள் 2024--25ம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான அட் -ஹாக் போனஸ் பெறுவார்கள் என்று நிதி அமைச்சக உத்தரவு மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகை ரூ.6,908 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலை அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து நிதித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த தீபாவளி போனஸ் குரூப்-பி, சி, டி உள்ளிட்ட அரசிதழ் பதிவு பெறாத 22 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் அரசுக்கு 18 கோடி ரூபாய் செலவாகும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை