உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி தொகுப்பு வழங்கல்

தீபாவளி தொகுப்பு வழங்கல்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில், அரசு மூலம் தீபாவளி பரிசு தொகுப்புகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 585 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நெட்டப்பாக்கம் ரேஷன் கடையில் தீபாவளி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை