உச்சிமேடு தன்னிறைவு பெற நடவடிக்கை: தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் உறுதி
பாகூர்: உச்சிமேடு கிராமம் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார். பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று உச்சிமேடு, கொரவள்ளிமேடு, பள்ளக்கொரவள்ளிமேடு உள்ளிட்ட கிராமங்களில், வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், 'உச்சிமேடு கிராமத்தில் பெரும் பகுதி ஆதிதிராவிடர்கள் வாழும் பகுதி. இப்பகுதியின் முக்கிய தேவையாக இருந்த அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமான பணியை முடித்துள்ளோம். மதிக்கிருஷ்ணாபுரம் - உச்சிமேடு சாலையை சீரமைத்துள்ளோம். மேலும், இப்பகுதி மக்களுக்கு வீடு, மனைப்பட்டா, உட்புற சாலைகள், தெரு விளக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். வரும் 5 ஆண்டுகளில் இப்பணிகளை செய்து முடித்து, ஒரு தன்னிறைவு பெற்ற கிராமமாக உச்சிமேடு அமையும். அதுபோல், பள்ளக்கொரவள்ளிமேடு கிராமத்திற்கு செல்லும் சாலை மற்றும் பாலமும் சீரமைக்கப்படும். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் ஆண்டுகளில் செயல்படுவோம் என்றார்.