16ம் தேதி தி.மு.க., செயற்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி நடக்கிறது. தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா அறிக்கை: புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம், மாநில அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், தி.மு.க., மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள்., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில், தமிழக எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.