மழையால் பாதித்தவர்களுக்கு தி.மு.க., நிர்வாகி உணவு வழங்கல்
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் மழையால் பாதித்தவர்களுக்கு தி.மு.க,. பொதுக்குழு உறுப்பினர் உணவு வழங்கினார்.புதுச்சேரியில் வீசிய புயல் மற்றும் கன மழை காரணமாக உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் பாதிப்படைந்தனர். பாதிப்படைந்த பகுதிகளை தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பார்வையிட்டு, ஆறுதல் கூறி உணவு, பால், பிரெட், பிஸ்கட், உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்..