மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள்
10-Oct-2025
அரியாங்குப்பம்: புதுச்சேரி தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான சக்திவேல் தனது பிறந்த நாளை, கொண்டாடினார். வீராம்பட்டினத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பிறந்த நாளை, கொண்டாடினார். தொடர்ந்து, செங்கழுநீர் அம்மன் கோவிலில், சாமி தரிசனம் செய்தார். பின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியையொட்டி, நாட்டுப்புற பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சிவா அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், அனிபல்கென்னடி, செந்தில்குமார், தி.மு.க., நிர்வாகிகள், அரியாங்குப்பம் தொகுதி இளைஞரணி உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரியாங்குப்பம் மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை, தொகுதி அமைப்பாளர் அரசு செய்திருந்தார்.
10-Oct-2025