உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வம், பிரபு மூர்த்தி, செங்கனி, வீரப்பன், கலியபெருமாள், செல்வராஜ், லிங்கநாதன், கேசவன், சந்தோஷ், சந்துரு, ஈஸ்வர், லோகேஷ் விஜயராஜ், குமரவேல், கமல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா வழிகாட்டுதலின்பேரில், தொகுதியில் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக நடத்துவது, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தி பரிசு வழங்குதல், தொகுதியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, தொகுதி முழுதும் 2026ம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டி வழங்குதல், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ