மேலும் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
8 minutes ago
மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
9 minutes ago
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
10 minutes ago
7 பேரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி
11 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையம் சுற்றி நடக்கும் பாலியல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க.,பொதுக்குழு உறுப்பினரும், உருளையான்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தார். மனுவில், உருளையன்பேட்டை தொகுதி, சுப்பையா நகர் முதல் குறுக்கு தெருவில், தனியார் ஓட்டல் பின்புறம் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் 10க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் காலை முதல் இரவு வரை இந்த பகுதியில் பல குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே உட்கார்ந்து அந்த பகுதிக்கு வரும் ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கின்றனர். சில நேரங்களில் போட்டி காரணமாக இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு ஆபாசமாக திட்டிக்கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். போலீசார் ரோந்து வரும் போது இவர்கள் மறைந்து கொள்கின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. தி.மு.க., நிர்வாகிள் பலர் உடனிருந்தனர்.
8 minutes ago
9 minutes ago
10 minutes ago
11 minutes ago