மேலும் செய்திகள்
தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை முகாம்
29-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் பிறந்த நாள் விழா தமிழ் திருமண மண்டபத்தில் நடந்தது.முன்னாள் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் வரவேற்றார். மாநில அவைத் தலைவர் சிவகுமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, சம்பத் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் தலைமையில் தொகுதி செயலாளர் வடிவேல் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.தொடர்ந்து 2 ஆயிரம் மகளிருக்கு உணவு, தையல் இயந்திரம் மற்றும் ஏழை தொழிலாளர்களுக்கு தட்டுவண்டி, அயன் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மாநில செயற்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.ஏற்பாடுகளை தொகுதி நிர்வாகிகள் சரவணன், வினோத், கண்ணன், இளைஞர் அணி கதிரவன், இசைமணி, உமேஷ், நசீர், ரமேஷ் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
29-Apr-2025