உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதவியை பறிக்க வேண்டும் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பதவியை பறிக்க வேண்டும் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிவித்த ஜான்குமார் எம்.எல்.ஏ., அல்லது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இருவரில் ஒருவரது பதவியை பறிக்க வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கு உள்ளவர்களால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது என்றும், இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சரி இல்லை என, தி.மு.க., சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறது. எங்களின் கருத்து உண்மை என்றுஏற்று, உள்துறை அமைச்சரை கண்டித்த ஜான் குமார் எம்.எல்.ஏ.,வுக்கு பாராட்டுக்கள்.ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாகவும், முதல்வரின் பாராளுமன்ற செயலராக உள்ள ஜான்குமார், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, கூறியிருப்பதற்கு, முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.ஜான்குமாரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் உள்துறை பொறுப்பு வகிக்கும் நமச்சிவாயத்தையும்; சட்டம் ஒழங்கு சரியாக இருந்தால், ஜான் குமாரை முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதிவிலிருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை