மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
புதுச்சேரி, செப். 16-இந்திரா நகர் தொகுதி தி.மு.க., புதிய அலுவலகம் திறப்பு விழா, தர்மபுரி அங்காளம்மன் கோவில் எதிரே நடந்தது. விழாவிற்கு தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கோதண்டராமன், பொருளாளர் பிரபு, துணைச் செயலாளர் சுப்ரமணியன், செல்லதுரை, தேவநாதன், ஜெகநாதன், ஜெகதீசன், பூபாலன், ராஜா, நாராயணசாமி முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர் ஏற்பாட்டில் நடந்த விழாவில், மாநில அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், பிரபாகரன், அமுதா குமார், டாக்டர் நித்திஷ், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
17-Aug-2025