உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால்கள் துார்வார தி.மு.க., கோரிக்கை மனு

வாய்க்கால்கள் துார்வார தி.மு.க., கோரிக்கை மனு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி தி .மு.க.,பொறுப்பாளர் நித்திஷ் தலைமையில் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: தட்டாஞ்சாவடி தொகுதி வெங்கடேஷ்வரா நகர் மெயின் ரோடு வழியாக செல்லும் வாய்க்கால் பல மாதங்களாக துார்வாரப்படாமல் உள்ளது. வாய்க்காலின் சுற்றுச்சுவரும் சேதமடைந்து உள்ளதால் வாய்க்கால் வழியாக செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீடுகளில் புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுபோல், இந்தாண்டு குடியிருப்புகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க வாய்க்காலை துார்வாரி, சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளம்பரிதி, அணி அமைப்பாளர்கள் காயத்ரி, மதிமாறன், தொகுதி அவைத்தலைவர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை