வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படி பிழைத்த திருடர்கள் மதம் மாறி பின்னர் முக்காடிட்டு வாழ்ந்தது வரலாறு
இன்று சாமானிய மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு, தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு மிரட்டிக்கொண்டு இருக்கிறது.ஆனால், பிரெஞ்சியர் காலத்தில் தங்கத்திற்கு கொஞ்சமும் குறையாக பொருளாக, கருப்பு மிளகு கருதப்பட்டது. விலையுயர்ந்த மசாலாப் பொருளான மிளகு வியாபாரத்திற்கு உலகம் முழுதும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐரோப்பிய சந்தைகளில் நுாற்றுக்கு 300 சதவீதம் வரை லாபம் தரும் பொருளாக இருந்தது. அந்த மிளகை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு தான் புதுச்சேரி, மாகேவை பிரெஞ்சியர்கள் பிடித்தனர்.கிடைத்த கருப்பு தங்கமான மிளகினை புதுச்சேரியில் பிரெஞ்சியர் பொக்கிஷமாக பாதுகாத்தனர். பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் மிளகினை திருடுவது தங்கத்தை திருடுவதற்கு சமமாகவே கருதப்பட்டது.மிளகு மூட்டைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வர்த்தகத்திற்கு கொண்டு செல்லும்போதும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அப்படியும் சில நேரங்களில் மிளகு மூட்டைகள் ஆங்காங்கே திருடு போனது. இதனால், மிளகு திருடினால் மரண தண்டனை விதிக்க பிரெஞ்சியர்கள் முடிவு செய்தனர்.வேலியே பயிரை மேய்ந்த கதையாக, 1742ல் லஸ்கர்கள் என அழைக்கப்பட்ட 3 கப்பல் ஊழியர்கள் இரண்டு மூட்டை மிளகு, ஒரு மூட்டை மெழுகினை திருடி கையும் களவுமாக சிக்கினர். இந்த விவகாரம் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எட்டியதும், இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த வழக்கில் ஆனந்தரங்கபிள்ளை நேரடியாக தலையிட்டார். ஆனந்தரங்கப்பிள்ளை மீது வைத்திருந்த அபிமானத்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்காமல் ஊருக்கு வெளியே துரத்திவிட்டுவிட கட்டளையிடப்பட்டது. அதை தொடர்ந்து 3 திருடர்களுக்கும் நாய் முத்திரையிட்டு ஊருக்கு வெளியே துரத்தியடிக்கப்பட்டனர்.நாய் முத்திரை என்பது நாய் உருவத்தில் சூடுபோடும் தண்டனையாகும். இதன் மூலம் குற்றவாளி எங்கு சென்றாலும் திருடன் என்று அடையாளம் கண்டுக்கொள்ளப்படுவான். பொதுமக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பர். இதற்காகவே மிளகு திருடர்களுக்கு பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் நாய் முத்திரையிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
அப்படி பிழைத்த திருடர்கள் மதம் மாறி பின்னர் முக்காடிட்டு வாழ்ந்தது வரலாறு