மேலும் செய்திகள்
கோவை அரசு மருத்துவமனையில் அசாம் வாலிபர் தற்கொலை
27-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. கண்காணிப்பாளர் ஆத்மநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை காவேரி மருத்துவமனை சிறப்பு நரம்பியல் நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் பேசியதாவது: இந்த மாதம் தலைவலி விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. தலைவலியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தலைவலியே நோய், மற்றொன்று உடல்நல பாதிப்புகளால் ஏற்படுவது. இரண்டிற்கும் சிகிச்சைகள் உள்ளது. சாதாரண தலைவலி மற்றும் உயிர் அபாயம் ஏற்படும் தலைவலியை கண்டறிந்து, அதற்கு 'ரிமோட் நியூரோ எலக்ட்ரிக்கல் மாடுலேஷன்' என்ற நவீன மருத்துவ 'டிவைஸ்' கொண்டு கட்டுப்படுத்தும் சிகிச்சை முறை நாடு முழுதும் வந்துவிட்டது. இஸ்ரேல் நாட்டின் தயாரிப்பான இந்த 'டிவைஸ்' அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை கைகளில் கட்டிக் கொண்டு, அதன் இயக்கத்தை மொபைல்போன் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். 45 நிமிடங்கள் செயல்படும். இந்த டிவைசில், சாதாரண மின்சார துாண்டல்கள் உருவாகி, அந்த துாண்டல்கள் மூலமாக தலைவலியை ஏற்படுத்தும் நரம்புகள் மீது தாக்கம் செலுத்தி தலைவலியை கட்டுப்படுத்துகிறது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. கர்ப்பிணிகள் கூட இந்த டிவைஸை பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பயன்ப டுத்த வேண்டும். சரியான உணவு, நேரத்திற்கு உறங்குவது உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களை சீராக்கினா ல் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்' என்றார்.
27-Aug-2025