உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார் வாரும் பணி

வாய்க்கால் துார் வாரும் பணி

அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கத்தில் 9 லட்சம் மதிப்பில் வாய்க்காலை துார் வாரும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, அபிேஷகப்பாக்கம் - டி.என்., பாளையம் செல்லும் வழியில், அபிேஷகப்பாக்கம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில், பூதர்கள் மண்டி கிடக்கிறது. இதனை மழை காலம் வருவதற்குள் துார் வார பொதுப்பணித்துறை சார்பில், 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் உதவிப்பொறியாளர் ஸ்ரீநாத், பொதுப்பணித்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங், பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி