மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி
14-Jun-2025
அரியாங்குப்பம்: பூராணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்து வந்தது. கடந்த 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் அர்ஜூனன் தபசு நடந்தது.முக்கிய நிகழ்வான, நேற்று தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து, தீமிதித்து நேரத்திக் கடன் செலுத்தினர். இன்று, இரவு 10:00 மணியளவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
14-Jun-2025