உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் போர்வெல் : எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

குடிநீர் போர்வெல் : எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

பாகூர்: சோரியாங்குப்பம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். பாகூர் தொகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில்,குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில், பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், 31.20 லட்சம் ரூபாய் செலவில், போர்வெல் அமைக்கப்பட்டது. போர்வெல்லை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, போர்வெல்லை இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில், பொதுபணித்துறை பொது சுகாதார கோட்டம், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர்கள் சிவானந்தம், கிராம முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை