மாணவிக்கு பாலியல் தொல்லை ஓட்டுனர் போக்சோவில் கைது
காரைக்கால் : காரைக்காலில் கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.காரைக்கால் உள்ள கல்லுாரியில் படிக்கும் 16 வயது மாணவி கல்லுாரிக்கு செல்லும் போது வாலிபர் ஒருவர் இவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து காரைக்கால் பகுதியை சேர்ந்த பாலாஜி, 19 ; என்ற வேன் ஓட்டுனரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.