உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காயமடைந்தவரை ஆம்புலன்ஸ்சில் ஏற்ற மறுத்த டிரைவரால் பரபரப்பு

காயமடைந்தவரை ஆம்புலன்ஸ்சில் ஏற்ற மறுத்த டிரைவரால் பரபரப்பு

பாகூர் : சாலை விபத்தில் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லாமல், ஆம்புலன்ஸ் டிரைவர் திரும்பி சென்ற சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.தவளக்குப்பத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன், 40. இவர், நேற்று காலை கன்னியக்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுச்சேரி - கடலுார் சாலை, கன்னியக்கோவில் ஸ்ரீநிவாசா கார்டன் அருகே அங்கிருந்த தடுப்பு கட்டையில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில், மகேஸ்வரன் சாலையில் விழுந்து காயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர், துணைக்கு யாராவது வந்தால் தான் காயமடைந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், பொது மக்கள் யாரும் முன்வராத நிலையில், காயமடைந்த நபரை அங்கேயே விட்டு ஆம்புலன்சை டிரைவர் திருப்பி எடுத்துச் சென்றார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நபரை, ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு ஏற்றி செல்லாமல், ஆம்புலன்ஸ் டிரைவர் திரும்பி சென்ற சம்பவத்திற்கு பொது மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை