உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

 டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

அரியாங்குப்பம்: காதலித்த பெண் இறந்ததால், மன உளைச்சலில் இருந்த டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். தவளக்குப்பம் அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் ஜெயகாந்த், 25; டிரைவர். இவர் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அப்பெண் குடும்ப பிரச்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இறந்தார். அதிலிருந்து, ஜெயகாந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். வீட்டில் இருந்த வர்கள் மற்றும் நண்பர்களிடம் அவர் சரியாக பேசுவதில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி