உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் காயமடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு

பாகூர்: விபத்தில் காயமடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தவளக்குப்பம், சடா நகரை சேர்ந்தவர் அரிகரன், 28; லாரி டிரைவர். இவரது மனைவி ஜெனிபர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரிகரன் நேற்று முன்தினம் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வீராம்பட்டினம் சென்றார். பின், நண்பர்களுடன் புறப்பட்டு சுசூகி அக்சஸ் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை, அவரது நண்பர் பரணிதரன் 26; ஓட்டினார். கார்த்தி, 27, அரிகரன் இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.புதுச்சேரி - கடலுார் சாலை, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் சென்ற போது, திடீரென தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயமடைந்த மூவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரிகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பரணிதரன், கார்த்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி