மேலும் செய்திகள்
சாலை விபத்தில் வாலிபர் பலி
10-Jul-2026
அறுவடை இயந்திரம் மோதி கட்டட தொழிலாளி பலி
20-Jun-2026
புதுச்சேரி: லாரி மோதி டிரைவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 45; மூலகுளம் மணி என்பவரிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வாணரப்பேட்டை தனியார் பள்ளியில் படிக்கும் முதலாளி மகனை அழைத்து கொண்டு ஹீரோ பேஷன் பைக்கில் (பி.ஒய்.01.பி.பி.5161) அரும்பார்த்தபுரம் பைபாசில் மூலகுளம் நோக்கி வந்தார். அப்போது பின்னால், வந்த லாரி பைக் மீது மோதியதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சரவணனை மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, சரவணன் இறந்தை உறுதி செய்தார். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Jul-2026
20-Jun-2026