கன்டக்டரை தாக்கிய டிரைவருக்கு வலை
பாகூர் : தனியார் பஸ் கன்டக்டரை, பீர் பாட்டிலால் தாக்கிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் 42; தனியார் பஸ் கன்டக்டர். இவர், கடந்த 7ம் தேதி மாலை தனது நண்பருடன், கரையாம்புத்துாரில் உள்ள அமுதசுரபி பாரில், மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, ஜெகதீசன் வேலை செய்து வரும் பஸ்சின் டிரைவர் பட்டரைபாதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த், பீர் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு, ஜெகதீசன் பணமில்லை என கூறினார். ஆத்திரமடைந்த ஆனந்த், அருகில் இருந்த பீர் பாட்டிலால் ஜெகதீசனை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தை தே டி வருகின்றனர்.