உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட் 

 மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட் 

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் போலி மருந்து வழக்கு தொடர்பாக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் இயங்கி வந்த 'மெடினோக் ெஹல்த் கேர்' நிறுவனத்தை கடந்த 13ம் தேதி மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் புதுச்சேரி மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு போலி மருந்து தயாரிப்பது உறுதி செய்யப்பட்டு, நிறுவனத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது. புதுச்சேரியில் மீண்டும் போலி மருந்து வழக்கு பூதாகரமாகி உள்ள நிலையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில், அவரை நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை சுகாதாரத்துறை அரசு செயலர் சவுத்திரி முகமது யாசின் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !