உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய சிறையில் போதைப் பொருட்கள் பறிமுதல்

மத்திய சிறையில் போதைப் பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி : காலப்பட்டு மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நடத்திய சோதனையில் குட்கா, கஞ்சா, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. காலப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறை மற்றும் புதுச்சேரி காவல்துறை மூலம் அவ்வப்போது சிறையில் பரிசோதனை செய்வது வழக்கம். புதுச்சேரி காவல் துறையில் இயங்கி வரும் எஸ்.டி.எப்., மூலம் சிறைக்குள்ளே தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சிறை முழுதும் சோதனை நடத்தினர். சிறையின் சமையல் கூட பகுதியில் ஹான்ஸ் 50 பாக்கெட், 30 பீடி கட்டு, கஞ்சா லைட்டர் மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் சில நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமீனில் சென்ற ரிஷி குமார், ஆனந்த் ஆகியோர் நள்ளிரவில் முதலாவதாக உள்ள சிறை காம்பவுண்ட் ஏறி குதித்து உள்ளே சென்று, இரண்டாவது காம்பவுண்ட் உள்ளே வீசியுள்ளனர். சிறையில் உள்ள தாடி அய்யனார், சத்யா ஆகியோருக்கு போதைப் பொருள் வீசியது தெரியவந்தது. போதைப் பொருட்கள் சமையல் கூட பகுதியில் வேலை செய்யும் சிறைவாசிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை