உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.ஸ்கூட்டர் விற்பனை அதிகரிப்பு

இ.ஸ்கூட்டர் விற்பனை அதிகரிப்பு

புதுச்சேரி, : பெட்ரோல் விலை உயர்வால், புதுச்சேரியில் இ.ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் வாகனங்கள் வாங்கும் போது, அதை வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் வாகன பதிவு சான்றிதழ் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில், புதுச்சேரியில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு 50 ஆயிரத்து 438 விற்பனையாகி உள்ளது. 2023ம் ஆண்டை விட, கடந்த ஆண்டு 14 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தொடர்ந்து, பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், 2023ம் ஆண்டு, இ.ஸ்கூட்டர் விற்பனை 2 ஆயிரத்து 638 ஆக இருந்தது. இது கடந்த 2024ம் ஆண்டு 3 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில், தினசரி 138 பைக்குகள் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் பைக்கை விட, இ.ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருவதாக, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை