உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: பூமியான்பேட்டையை சேர்ந்தவர் சஞ்சய், 22; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், வேலைக்கு செல்லும் பணத்தை வைத்துக்கொண்டு, அடிக்கடி குடித்து வந்தார். அதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த 2ம் தேதி இரவு, மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சஞ்சய், மாடிக்கு சென்று எலிபேஸ்ட் சாப்பிட்டுள்ளார். உடனடியாக உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சஞ்சய், நேற்று முன்தினம் இறந்தார்.ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை