உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.கம்யூ., கிளை மாநாடு

இ.கம்யூ., கிளை மாநாடு

வில்லியனுா : வில்லியனுார் தொகுதி இ.கம்யூ., கிளை மாநாடு கொம்பாக்கத்தில் நடந்தது.ஆசிரியர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை கட்சியின் மூத்த உறுப்பினர் லுாக்காஸ் ஏற்றி வைத்தார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் அன்துவான் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.சிறப்பு அழைப்பாளராக இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் சிரைப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பெஞ்சமின், தொகுதி துணை செயலாளர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கிளை செயலாளர் பாத்திமா மாநாட்டு அறிக்கை வாசித்தார்.கிளை நிர்வாகிகள் சவுரியம்மாள், வித்தியா, பெனி மைக்கேல், அந்தோணி, நாசர், மாலதி, இந்திரா, வனத்தையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை