உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளிநாட்டில் கல்வி : வழிகாட்டுதல் கருத்தரங்கு

வெளிநாட்டில் கல்வி : வழிகாட்டுதல் கருத்தரங்கு

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பிரெஞ்சு துறை மற்றும் தர உறுதியளிப்பு குழு சார்பில் 'கேட்வே டூ பிரான்ஸ் 2.0' என்ற வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ருதி மரியம் ஜோசப், பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புகள், சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள். விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறை, கல்வி உதவித்தொகைகள், நிதி ஆதரவு, கல்விக்குப் பிறகான வாய்ப்புகள் மற்றும் வரஇரு க்கும் கல்வி கண்காட்சி குறித்து பேசினார். ஏற்பாடுகளை பிரெஞ்சு துறைத் தலைவர் சரவணன், பேராசிரியர் நித்யா மற்றும் மாணவியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !