போக்சோ வழக்கில் முதியவர் கைது
புதுச்சேரி : டியூஷன் சென்று வந்த சிறுமியை, அழைத்து சென்று பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி, மேட்டுப்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை, அதே பகுதியில் டியூஷனில் படித்து விட்டு, காலை 8 மணிக்கு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதேப் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தபடி அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி பள்ளிக்கு செல்ல நேரமாகியும், அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் தேடினர். அப்போது சிறுமி ஒரு வீட்டின் அருகே அழுது கொண்டிருந்தார். சிறுமியிடம் விசாரித்தபோது, அதேபகுதியை சேர்ந்த முதியவர் புஷ்பநாதன்,76; சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, புஷ்பநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.